பிக் பாஸ் 3 புகழ் தரஷன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்றவர் தர்ஷன். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு மிகப் பெரிய அளவிற்கு ரசிகர்கள் கிடைத்தனர். அவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை மற்றும் மாடல் அழகியான சனம் ஷெட்டி, தர்ஷன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதாவது, பிக் பாஸ் பிரபலம் தரஷன் அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது, நம்பிக்கை துரொகம் செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனக்கும் தர்ஷனுக்கும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், அப்போது ஜூன் மாதம் தங்களது திருமணமும் நிச்சயமானதாகவும் கூறியுள்ளார். நிச்சயம் நடந்ததற்கான புகைப்படங்களையும், அழைப்பிதழையும் ஆதாரங்களாக வைத்துள்ளார்.
புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த சனம் ஷெட்டி, “திருமண வேலைகளை பார்த்துகொண்டிருக்கும் போது பிக் பாஸ் நிகச்சிக்கான கன்ஃபார்மேஷன் வந்தது. அதனால், அவர் “கல்யாணம் செய்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ழிக்கு சென்றார், எனக்கு பெண் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள், அதனால் நிகழ்ச்சி முடித்து வந்த பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என வாக்களித்தார். நமக்கு நிச்சயம் ஆன விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என என்னிடமும் சத்தியம் பெற்றுக்கொண்டார். நானும் இதுவரை யாரிடமும் வெளியே சொல்லவில்லை.
அவர் அந்த நிகழ்ச்சியில் நல்ல புகழ் சம்பாத்திதார், அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் நான் தான் அவருக்காக அந்த நிகச்சிக்கு அப்ளிகேஷன் அனுபினேன்” என்றார்.
மேலும் “பிப் பாஸுக்கு முன்னால் 2 வருடங்களுக்கு மேளாக பழகி வந்த நிலையில், படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதற்காக அவருக்கு கிட்டத்தட்ட 15 லட்ச ரூபாய் என சொந்தா பணத்தில் செலவழித்துள்ளேன். அனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அந்த நாளிலிருந்து அவர் மாறிவிட்டார். என்னை ஒதுக்கிவிட்டார். நானாக அவரிடம் பேச முயற்சித்த போதும் என்னை அவமானப்படுத்தும் விதமாக பேசினார்.
தற்போது சனம் ஷெட்டி என்ற பெண்னை பார்த்ததே இல்லை, அப்படி ஒரு பெண்ணை தன் வாழ்வில் சந்திக்கவில்லை என்பது போல நடந்து கொள்கிறார். சோசியல் மீடியாக்களிலும் என்னைப் பற்றிய பதிவுகளை அவர் கணக்குகளிலிருந்து அழித்துள்ளார்” என்றார்.
மேலும், இலங்கைகே சென்று தர்ஷனின் பெற்றோர்களிடம் இது குறித்து நியாம் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் “அபோது அவன் உன்னை காதலித்தான், ஆனால் இப்போது இல்லை என்று சொல்கிறான், அதனால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது” எனக் கூறி வீட்டை விட்டு வெளியே துரத்தியதாகக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “நான் மீண்டும் தர்ஷனிடம் பேசிய போது “உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, உன் கேரக்டர் சரியில்லை, உன்னோடு நடிக்கும் ஹீரோக்களுடன் தகாத உறவு வைத்திருக்கிறாய்” என்று என்னை மெண்டல் ஹராஸ்மெண்ட் செய்கிறாரர். மேலும் “இதைப்பற்றி நீ வெளியே கூறினால் உன்னை யாரும் நம்ப மாட்டார்கள், என் ரசிகர்களே அதைப் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறிகிறார்” என சனம் ஷெட்டி கூறினார்.
இவ்வாறு பலவற்றைக் கூறி மாவேதனையுடன் பேசிய அவர், “கடைசியாக வேறு வழியின்றி புகார் அளித்துள்ளேன். இதில் தனக்கு நியாம் கிடைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது
பிக் பாஸ் 3 புகழ் தரஷன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை சனம் ஷெட்டி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
• Manimaran