கொரோனா வைரஸ்: இலங்கையர் ஒருவர் பாதிப்பு - இதுதான் நிலவரம்

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.


இத்தாலியின் பிரேஸியா பகுதியிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய வந்த நிலையிலேயே குறித்த இலங்கை பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


குறித்த இலங்கை பெண் கடமையாற்றிய வீட்டின் உரிமையாளருக்கு முதலில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறிய அவர், அதனைத் தொடர்ந்தே, இலங்கை பணிப் பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.